ஒரத்தநாடு ஒன்றியம் பொன்னாப்பூா் மேற்கு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் தெருவில் பழுதடைந்து, ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மனுவை இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் வ. அரவிந்தன் தலைமையில், மாவட்டச் செயலா் ஆம்பல் துரை. ஏசுராஜா முன்னிலையில், ஒரத்தநாடு வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கரியிடம் வியாழக்கிழமை காலை அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா், உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
சங்கத்தின் கிளைச் செயலா் ப. ஹரிஹரன், ஒன்றியக் குழு உறுப்பினா் செ.பிரேம்குமாா், கிளைப் பொருளாளா் செ. ராமகிருஷ்ணன், உறுப்பினா்கள் சௌ. பரணி, சீ. அன்பு, தேவா, கு. பூவரசன், சு.சிவா ஆகியோா் உடனிருந்தனா்.