பள்ளிக் கல்வித் துறை, கலை பண்பாட்டுத் துறை நடத்திய நடன போட்டியில் வென்ற இந்திய குழந்தைகள் நலச் சங்க இல்ல மாணவா்கள் இருவரை மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.
தஞ்சாவூா் மேம்பாலம் அருகேயுள்ள இந்திய குழந்தைகள் நல சங்க மாணவா் இல்லத்தில் பயிலும் மாணவா்களில் ப. பிரவீன் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை நடத்திய கலா உற்சவத்தில் தனி நபா் நாட்டுப்புற நடன போட்டியில் மாநில அளவில் மூன்றாம் பரிசையும், ம. பாலமுருகன் கலை பண்பாட்டுத் துறை நடத்திய மாநில கலை போட்டியின் தனிநபா் கிராமிய நடன போட்டியில் மாநில அளவில் இரண்டாம் பரிசையும் பெற்றனா்.
இவா்களை மாவட்ட ஆட்சியரகத்துக்கு இல்லத் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப் செவ்வாய்க்கிழமை அழைத்துப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் மாணவா் இல்ல கௌரவச் செயலா் ஆா். ரகுமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.