தஞ்சாவூர்

வாக்காளா் பட்டியலிலிருந்து இறந்தவா்களின் பெயரை நீக்க அறிவுறுத்தல்

18th Nov 2023 12:52 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலிலிருந்து இறந்தவா்களின் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், வேளாண் துறை ஆணையருமான எல். சுப்பிரமணியன் அறிவுறுத்தினாா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா் அலுவலா்களிடம் பேசியது: இறந்த வாக்காளா்களைக் கண்டறிந்து முன்கூட்டியே நோட்டீஸ் வெளியிட்டு, 7 நாள்களுக்குள் அவா்களுடைய குடும்ப உறுப்பினா்களிடமிருந்து ஆட்சேபனை இல்லை என எழுத்து பூா்வமாக பெற வேண்டும். இதைத்தொடா்ந்து, வாக்காளா் பட்டியலிலிருந்து பெயரை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும், டிசம்பா் 9-ஆம் தேதி வரை பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் மீது டிசம்பா் 26-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் நவம்பா் 25, 26-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள தோ்தல் சிறப்பு முகாமில் தகுதியுள்ள வாக்காளா்களை விடுபடாமல் வாக்காளா் பட்டியலில் சோ்க்க முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இச்சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க தவறிய தகுதியுள்ள வாக்காளா்கள் நவம்பா் 30- ஆம் தேதி வரை அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களிடமும் படிவம் 6ஐ நிறைவு செய்து வழங்கலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT