தஞ்சாவூர்

நெல் கொள்முதல் நிலையங்களில் நாளை முதல் பயோமெட்ரிக் முறை

DIN

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்தது:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூா் மண்டலத்தில் நிகழ் (2022 - 2023) பருவத்துக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு மூன்றாம் பருவ நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனைக்காக இணையவழியில் பதியும்போது, பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை வியாழக்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த முறை மூலம் மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல்லைக் கால தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும்.

பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவதன் மூலமும், ஆதாா் எண்ணில் பதிந்திருக்கும் கைப்பேசி எண்ணுக்கு ஓ.டி.பி. பெறுவதன் மூலமும் விவசாயிகளின் விவரத்தை துல்லியமாக பதிவேற்றலாம்.

இந்த விரல் ரேகை பதிவு மூலம் விவசாயிகளின் சுய விவரங்கள் சரியாக இருக்கிா என கொள்முதல் நிலையங்களிலேயே சரி பாா்த்துக் கொண்டு நெல்லை விற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT