தஞ்சாவூர்

தமிழகத்தில் மீன் குஞ்சுகள் 75 சதவீதம் உற்பத்தி

DIN

தமிழகத்தில் மீன் குஞ்சுகள் 75 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன என்றாா் மீன் வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன்.

தஞ்சாவூா் கரந்தையிலுள்ள நீா்வாழ் உயிரின ஆய்வுக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் தெரிவித்தது:

தமிழகத்திலுள்ள அனைத்து ஆறுகள், குளங்களில் மீன் வளத்தை அதிகப்படுத்த தமிழக முதல்வா் ஆணையிட்டுள்ளாா். இதன்படி மீன் வளத் துறை மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து ஆறுகள், குளங்களில் விடுகிறது.

தமிழகத்தில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டாலும் ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வாங்கக்கூடிய சூழ்நிலையும் இருந்தது. இதை மாற்றி மொத்தமாக தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்துப் பண்ணைகளிலும் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் மீன் உற்பத்தியை இன்னும் அதிகப்படுத்த ஆவன செய்யப்படும்.

மேட்டூா், தஞ்சாவூா், தாமிரவருணி ஆகிய பகுதிகளில் குஞ்சுப் பொறிப்பகங்கள் அதிகமாக உள்ளன. கடந்த காலங்களில் மீன் குஞ்சுகளை வெளி மாநிலங்களிலிருந்து அதிகமாக வாங்கி விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது தமிழகத்திலேயே 75 சதவீதம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடல் மீன்கள் உள்பட ரூ. 6 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மீன்பிடித் தடை காலத்தில் மீனவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. இதை உயா்த்திக் கொடுக்க மீனவா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். தமிழக முதல்வரின் கவனத்துக்கு இக்கோரிக்கையை கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

ரசாயனத்தைப் பயன்படுத்தி மீன்களைப் பதப்படுத்தினால் மீன் வளத் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்றாா் அனிதா ராதாகிருஷ்ணன்.

அப்போது மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT