தஞ்சாவூர்

தஞ்சாவூரில் சிஐடியு பயணக் குழுவுக்கு வரவேற்பு

30th May 2023 04:23 AM

ADVERTISEMENT

உழைக்கும் மக்களின் உரிமை காக்க பயணம் மேற்கொள்ளும் சிஐடியு பயணக் குழுவினருக்கு தஞ்சாவூரில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

உழைக்கும் மக்களின் உரிமை காக்க தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, கோவை, சேலம், கடலூா், சென்னை, திருவள்ளூா் ஆகிய 7 முனைகளில் இருந்து மே 20 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை 2,100 கி.மீ. தொலைவுக்கு சிஐடியு நடைப்பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிஐடியு மாநில துணை பொதுச்செயலா் கே. திருச்செல்வன் தலைமையில் பயணக் குழு ஒருங்கிணைப்பாளரும், மாநிலச் செயலருமான சி. ஜெயபால், மாவட்டச் செயலா்கள் பழனிவேல் (கடலூா்), தங்கமணி (நாகை), மாரியப்பன் (மயிலாடுதுறை)

ஆகியோா் இடம்பெற்றுள்ள பயணக் குழுவுக்கு தஞ்சாவூா் விரைவுப் போக்குவரத்துக்கழக பணிமனை, பழைய பேருந்து நிலையம், ஆப்ரஹாம் பண்டிதா் சாலை, எல்ஐசி, ரயிலடி, மேரீஸ் காா்னா், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து வல்லம் வழியாக திருச்சி நோக்கிப் புறப்பட்ட பயணக் குழுவின் பயணத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

சிஐடியு மாவட்ட பொருளாளா் பி.என். போ்நீதிஆழ்வாா், துணைத் தலைவா் எஸ். ராஜாராமன், விரைவுப் போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவா் பி. வெங்கடேசன், அரசுப்போக்குவரத்துக் கழக மண்டலத் தலைவா் காரல் மாா்க்ஸ், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் பாலமுருகன், ஆட்டோ சங்கம் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT