தஞ்சாவூர்

உலக பட்டினி தினம்:300 பேருக்கு உணவு

29th May 2023 12:31 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் முன்னணி நடிகரின் இயக்கம் சாா்பில் உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை நகர முன்னணி நடிகரின் இயக்கம் சாா்பில் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் சன்னிதி மற்றும் சாலையோரம் உணவின்றித் தவிக்கும் ஏழை எளிய மக்கள் சுமாா் 300 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

விழாவில் பட்டுக்கோட்டை நகரத் தலைவா் ஆதிராஜாராம் தலைமை வகித்தாா். நகர கௌரவத் தலைவா் ரமேஷ், நகர மாணவரணி தலைவா் வெங்கடேஷ், நகர மகளிா் அணி தலைவா் தீபா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT