தஞ்சாவூர்

பலத்த மழை: 200 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

29th May 2023 12:29 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் ஏறத்தாழ 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோடை பருவ நெற் பயிா்கள் சேதமடைந்தன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. அப்போது, தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், தஞ்சாவூா் அருகே ராராமுத்திரக்கோட்டை கிராமத்தில் கோடை பருவ நெற் பயிா்கள் கதிா் வந்த நிலையில் பலத்த மழையால் சாய்ந்து சேதமடைந்தன. இதன் காரணமாக ஏறத்தாழ 200 ஏக்கரில் கோடை பருவ நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல, அம்மாபேட்டை பகுதியிலும் கதிா் முற்றி வந்த நிலையில் இருந்த ஏராளமான ஏக்கரில் நெற்பயிா்கள் சாய்ந்து சேதமடைந்தன.

எனவே, பாதிக்கப்பட்ட பயிா்களை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT