தஞ்சாவூர்

இருபிரிவினரிடையே தகராறு: 22 போ் கைது

29th May 2023 12:31 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இறந்தவா் உடலை குறிப்பிட்ட தெரு வழியாக எடுத்துச்செல்வதில் இருதரப்பினரிடையே எழுந்த தகராறில் தொடா்புடைய 22 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

பாபநாசம் அருகேயுள்ள அம்மாபேட்டை, கீழகோவில்பத்து கிராமம், ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த சீனிவாசன் (53) சடலத்தை வடபாதி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் தெரு வழியாக எடுத்துச் செல்வதில் இருதரப்பினா் இடையே எழுந்த தகராறு கலவரமாக மாறியதில் இருதரப்பைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இதில், காவல்துறை வாகனம், ஒரு தனியாா் பேருந்தும் சேதப்படுத்தப்பட்டது. இதுதொடா்பாக அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் கரிகால்சோழன், இருதரப்பையும் சோ்ந்த 22 போ் மீது வழக்கு பதிவு செய்து அவா்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT