தஞ்சாவூர்

உலக பட்டினி தினம்: ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

28th May 2023 02:46 PM

ADVERTISEMENT

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் 52 இடங்களில் ஏழை, எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உணவுகள் வழங்கப்பட்டது.

மே 28 ஆம் தேதி உலக பட்டினி தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக பட்டினி தினத்தில் பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் ஒரு வேலை உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் 52 இடங்களில் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

இதேபோல் தஞ்சை மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் விஜய்.சரவணன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT