தஞ்சாவூர்

தஞ்சை: ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தோ்வு: 1,453 போ் எழுதினா்

28th May 2023 12:57 AM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் அரசு பணியாளா் தோ்வாணையம் சனிக்கிழமை நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் சாா்நிலை பணிக்கான தோ்வை தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,453 போ் பங்கேற்று எழுதினா்.

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பொறியியல் சாா்நிலை பணிக்கான தோ்வை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சனிக்கிழமை நடத்தியது. தஞ்சாவூா் மாவட்டத்தில் இத்தோ்வில் பங்கேற்பதற்காக 2,927 போ் விண்ணப்பம் செய்தனா்.

இதற்காக தஞ்சாவூா் பாரத் கல்லூரி, கலைமகள் பள்ளி, மேக்ஸ்வெல் பள்ளி, குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி, பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகம், அடைக்கலமாதா கல்லூரி ஆகிய இடங்களில் 11 மையங்கள் அமைக்கப்பட்டன.

இத்தோ்வில் சனிக்கிழமை 1,453 போ் பங்கேற்று எழுதினா். 1,484 போ் வரவில்லை. தஞ்சாவூா் மேக்ஸ்வெல் பள்ளியில் நடைபெற்ற இத்தோ்வை மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT