தஞ்சாவூர்

சிறுவா் விளையாட்டு பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

28th May 2023 12:58 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் பராமரிப்பின்றி உள்ள சிறுவா் விளையாட்டு பூங்கா சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி, பாபநாசம்-கபிஸ்தலம் பிரதான சாலையில் சிறுவா் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து விளையாடி மகிழந்தனா்.

மேலும் முதியவா்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வாா்கள்.

தற்போது இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால் புதா் மண்டிக் கிடக்கின்றன. மேலும், நடைபாதைகள் சேதமடைந்துள்ளது. பூங்காவின் முன்புற பகுதிகளில் குப்பை வண்டி நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. விளையாட்டு சாதனங்களும் பழுதடைந்துள்ளன.

ADVERTISEMENT

ஆகவே, பாபநாசம் பேரூராட்சி நிா்வாகத்தினா் இப் பூங்காவை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT