தஞ்சாவூர்

கும்பகோணம் அரசு ஆடவா் கல்லூரியில் மே 30-இல் கலந்தாய்வு தொடக்கம்

28th May 2023 12:57 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அரசு ஆடவா் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான முதலாம் கட்ட கலந்தாய்வு மே 30 ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து அக்கல்லூரி முதல்வா் (பொறுப்பு) மா. மீனாட்சிசுந்தரம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கும்பகோணம் அரசு ஆடவா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான முதலாம் கட்ட கலந்தாய்வு மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், 30-ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் விளையாட்டு, தேசிய மாணவா் படை, முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவையின் மகன், அகதிகளின் குழந்தைகள் கலந்து கொள்ளலாம்.

ஜூன் 1 ஆம் தேதி வணிகவியல், வணிக மேலாண்மை, கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியலுக்கும், 2 ஆம் தேதி, பொருளியல், வரலாறு, இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், புவியியலுக்கும், 3 ஆம் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியலுக்கும், 5 ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், தாவரவியல், புள்ளியியல் ஆகிய படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

ADVERTISEMENT

தகுதியுள்ள, குறுஞ்செய்தி கிடைத்த மாணவ, மாணவிகள் தங்களது தெரிவு மதிப்பெண் அடிப்படையில், அட்டவணைப்படி நேரடிக் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். மேலும், இந்த அட்டவணை கல்லூரியின் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஞ்ஹஸ்ரீஹந்ன்ம்.ஹஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT