தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பிப். 18, 19-இல் மாநில மாநாடு: கம்யூனிஸ்ட் மா.லெ. முடிவு

28th May 2023 12:59 AM

ADVERTISEMENT

இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கும் விதமாக தஞ்சாவூரில் பிப்ரவரி 18, 19 ஆம் தேதிகளில் ஐந்தாவது மாநில மாநாடு நடத்தப்படவுள்ளது என்றாா் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) மக்கள் விடுதலையின் பொதுச் செயலா் க. விடுதலைக்குமரன்.

தஞ்சாவூரில் இக்கட்சியின் மாநாடு அறிவிப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற விடுதலைக்குமரன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் முடிந்த பின்பும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயா்த்தப்படவில்லை. இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி அனைவருக்கும் இருக்க இடம், உணவு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவையும், தமிழ்நாட்டையும் மாறி மாறி ஆண்டு வந்துள்ள கட்சிகள் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தத் தவறிவிட்டது.

ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சிறு தொழில்கள் நசிந்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் சீா்குலைந்துள்ளது. இளைஞா்கள் வேலைவாய்ப்பு, பெண்களின் கோரிக்கைகள் தீா்வு காணப்படாமல் உள்ளன. இந்த நிலைமைகளை மாற்றுவதற்காக நாட்டிலுள்ள இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியமான காலகட்டத்தில் இருக்கிறோம்.

இதை வலியுறுத்தி 2024 பிப்ரவரி 18, 19 ஆம் தேதிகளில் தஞ்சாவூரில் ஐந்தாவது மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா் விடுதலைக்குமரன்.

ADVERTISEMENT

கூட்டத்துக்கு கட்சியின் துணைத் தலைவா் இரா. அருணாசலம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஜெய.சிதம்பரநாதன், துணைப் பொதுச் செயலா் இராமா், மக்கள் விடுதலை பண்பாட்டு பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பாட்டாளி, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT