தஞ்சாவூர்

செந்தலைப்பட்டினம் ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப்பணி

28th May 2023 12:57 AM

ADVERTISEMENT

 சேதுபாவாசத்திரம் ஒன்றியம், செந்தலைப்பட்டினம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்ற இப்பணி தொடக்க நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ரஹ்மத்துல்லா தலைமை வகித்தாா்.

ஒன்றியக் குழு தலைவா் மு.கி. முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தாா்.  சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா்  சாலை அமைக்கும் பணியை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா் 

இதேபோல் பேராவூரணி ஒன்றியம், ஒட்டங்காடு ஊராட்சி, மதன்பட்டவூா் நல்லமான் புஞ்சையில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.16.50 லட்சத்தில் புதிய நியாய விலை கடை கட்டட பணிக்கு அடிக்கல்  நாட்டு விழா சட்டப்பேரவை உறுப்பினா் தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் அன்பழகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அலிவலம் மூா்த்தி, ஊராட்சி மன்ற தலைவா் ராஜாக்கண்ணு, ஒன்றியக் குழு உறுப்பினா் பாக்கியம் முத்துவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வேந்திரன், தவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT