தஞ்சாவூர்

சுவாமிமலை - சென்னை பேருந்து வழித்தடம் மீண்டும் தொடக்கம்

24th May 2023 03:48 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் சுவாமிமலை - சென்னை பேருந்து வழித்தடம் செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் தொடக்கி வைக்கப்பட்டது.

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இப்பேருந்து சேவையைப் பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் இயக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைப்படி, செவ்வாய்க்கிழமை இப்பேருந்து சேவையை சுவாமிமலையிலிருந்து மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இப்பேருந்து நாள்தோறும் இரவு 10.10 மணிக்கு சுவாமிமலையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு அதிகாலை 5.15 மணிக்கு சென்றடையும். சென்னையிலிருந்து நாள்தோறும் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.30 மணிக்கு சுவாமிமலைக்கு வந்தடையும்.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. இராமலிங்கம், தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினா் மு. சண்முகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எச். ஜவாஹிருல்லா (பாபநாசம்), சாக்கோட்டை க. அன்பழகன் (கும்பகோணம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் எஸ்.எஸ். ராஜ்மோகன், பொது மேலாளா் ஜெ. ஜெபராஜ் நவமணி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவா் எஸ்.கே. முத்துசெல்வம், சுவாமிமலை பேரூராட்சித் தலைவா் எஸ். வைஜெயந்தி சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT