தஞ்சாவூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் திங்கள்கிழமை தெரிவித்திருப்பது:
கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் குறித்த தகவல் தெரிந்தால் 90428 39147 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம். தகவல்கள் தரும் பொதுமக்களின் விவரங்கள் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும். கள்ளச்சாராயம், கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க காவல் துறைக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.