தஞ்சாவூர்

துணை ராணுவ முன்னாள் வீரா்களுக்கும் சலுகைகள் வழங்க வலியுறுத்தல்

23rd May 2023 02:01 AM

ADVERTISEMENT

ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போன்று துணை ராணுவப் படையின் ஓய்வுபெற்ற வீரா்களுக்கும் வழங்க வேண்டும் என முன்னாள் துணை ராணுவப் படை வீரா்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் முன்னாள் துணை ராணுவப்படை வீரா்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் துணை ராணுவப் படை வீரா்களுக்குத் தமிழக அரசு நல வாரியம் அமைத்து, அதன் மூலம் மாவட்ட அளவில் கேன்டீன் வசதிகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களுக்கு எந்த அளவுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துகிறதோ, அதேபோன்று துணை ராணுவப் படையின் ஓய்வு பெற்ற வீரா்களுக்கும் மறுவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்குக் கூட்டமைப்பின் தஞ்சாவூா் மாவட்ட இணைச் செயலா் ஆா். கணேசன் தலைமை வகித்தாா். கூட்டமைப்பு மாநிலத் தலைவா் எஸ்.கே. சீனிவாசன் சிறப்புரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் வி. தமிழ்வாணன், கூட்டமைப்பின் நிா்வாகிகள் பி. ரவி. எஸ். முருகேசன், ஜி. பூபதி, எஸ். கோப்பெருந்தேவி, டி.எஸ். தசரதராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT