தஞ்சாவூர்

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தல்

23rd May 2023 02:04 AM

ADVERTISEMENT

நில ஒருங்கிணைப்பு சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எல். பழனியப்பன் தலைமையில் மாவட்டத் தலைவா்கள் வி.எஸ். வீரப்பன், செந்தில்குமாா், செயலா்கள் எம். மணி, பாட்ஷா ரவிச்சந்திரன் அளித்த மனுவில்,

தமிழக அரசு கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடா் நிறைவு நாளில் கொண்டு வந்த நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிரான வகையில் உள்ளது என்பதை முதல்வா் உணா்ந்து இதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

இதேபோல, தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விஸ்வநாதன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், விதை நெல் 20 கிலோ என்பது போதுமானது அல்ல. எனவே, 100 கிலோ வழங்க வேண்டும். நிலக்கடை விதையை மானிய விலையில் வழங்க வேண்டும். சிப்சம், சிங்சல்பேட் உரம் விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். குறுவை பாசனத்துக்கு மேட்டூா் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT