தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம்

19th May 2023 12:00 AM

ADVERTISEMENT

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் சாலை மேம்பாடு, கடல்பசு பாதுகாப்பு மையம் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழக அரசு  நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு ஒன்றிய குழுக் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் மு.கி.முத்துமாணிக்கம் தலைமையில் , வட்டார வளா்ச்சி அலுவலா்கள்  கிருஷ்ணமூா்த்தி, சடையப்பன் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது .

கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். 

உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு ஒன்றியக் குழுத் தலைவா் முத்துமாணிக்கம் பதில் அளித்து பேசினாா்.

ADVERTISEMENT

விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ. 8.5 கோடி ஒதுக்கீடு செய்தமைக்கும், மனோராவை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக அரியவகை கடல் வாழ் தாவர உண்ணியான கடல் பசுவுக்கு ரூ.15 கோடியில் பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில்  பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக ஒன்றிய மேலாளா் நாகேந்திரன் நன்றி கூறினாா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT