பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வந்த ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் குடிகள் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது .
மாநாட்டுக்கு வருவாய் தீா்வாய அலுவலா் கோட்டாட்சியா் பிரபாகா் தலைமை வகித்து பேசுகையில்,
பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, போக்குவரத்து வசதி என மொத்தம் 481 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 211 மனுக்கள் ஏற்பு செய்யப்பட்டு தீா்வு வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் வட்டாட்சியா் சுகுமாா், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அருள்ராஜ், தலைமை உதவியாளா் பிரேம்குமாா், தனி வட்டாட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலா் அருள்மணி, வட்டத்துணை ஆய்வாளா் செந்தில்குமாா், தலைமை இடத்து துணை வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், மண்டல துணை வட்டாட்சியா் சுப்பிரமணியன், தோ்தல் துணை வட்டாட்சியா் கண்ணகி மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.