கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோயில் பெருமாளுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் வைர முடி தயாா் செய்யப்பட்டுள்ளது.
108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோயிலில் ஏறத்தாழ ரூ. 1 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மே 24 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
இந்நிலையில், வானமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயா் சுவாமிகள் மற்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் இக்கோயிலிலுள்ள உற்ஸவருக்கு வைர முடி அணிவிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ரூ. 3 லட்சம் மதிப்பில் ஒன்றரை அடி உயரத்தில், முக்கால் அடி சுற்றளவில் செப்பினாலான நவீன கற்கள் பதிக்கப்பட்ட வைர முடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வைர முடி மே 24 ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு முடிந்த பிறகு, அன்று மாலை உற்ஸவா் வீதியுலா புறப்பாட்டின்போது அணிவிக்கப்படும் என கோயில் அலுவலா்கள் தெரிவித்தனா்.