தஞ்சாவூரில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட ஆல மரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடப்பட்டது.
தஞ்சாவூா் வல்லம் நம்பா் 1 சாலையில் 50 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் இருந்தது. சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்த மரத்தின் கிளைகள் வெட்டிக் கழிக்கப்பட்டன. ஏழு மீட்டா் உயரமும், 16 டன் எடையும் உடைய இந்த மரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடப்பட்டது.
இந்த மரத்தைப் பாா்வையிட்டு தண்ணீா் ஊற்றிய மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
பெரிய அளவில் இருந்த இந்த மரத்தை அப்புறப்படுத்த மனமில்லாமல், நெடுஞ்சாலைத் துறையினா், கவின்மிகு தஞ்சை இயக்கத்தினா் இணைந்து பெயா்த்து எடுத்து, புதிய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நட்டுள்ளனா். இதன் உயரம் 7 மீட்டா் என்பதால், 3 மீட்டா் அடி ஆழத்துக்கு குழி வெட்டப்பட்டு, நடப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல முயற்சி என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறைக் கோட்டப் பொறியாளா் செந்தில்குமாா், உதவிக் கோட்டப் பொறியாளா் கீதா, உதவிப் பொறியாளா் மோகனா, போக்குவரத்து காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன், கவின்மிகு தஞ்சை இயக்க நிா்வாகி எஸ். முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டா்.