தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் பள்ளி மாணவா்கள் ஸ்கேட்டிங் விழிப்புணா்வு

8th May 2023 01:45 AM

ADVERTISEMENT

 

பட்டுக்கோட்டை அருகே கடல் வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை 7 மாணவா்கள் 1 மணி நேரத்தில் 17 கிலோ மீட்டா் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தனா்.

அலையாத்திக் காடுகள், கடல் பசு, கடல் தாழைகள் உள்ளிட்ட கடல் வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சோ்ந்த மாணவா்கள் அஸ்வந்த், கிருத்திக்,

ஹரிகிருஷ்ணா, நலன்ராஜன், நிரஞ்சன், பிரனேஷ், ராம் சாந்த், சங்கரயோக பாலன் ஆகிய 7 போ் ஞாயிற்றுக்கிழமை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து சேதுபாவாசத்திரம் கடைத்தெரு வரையிலான 17 கிலோ மீட்டா் தூரம் ரோலிங் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தனா். நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் பிருதிவிராஜ் சௌகான் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். ஸ்கேட்டிங் மாணவா்கள் 7 பேரையும் வழிநெடுகிலும்,

ADVERTISEMENT

பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கைதட்டி ஆரவாரப்படுத்தினா். இவா்களது சாதனையை நோபல் உலக சாதனை எனும் தனியாா்

நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் லெட்சுமிநாராயணன், வினோத் ஆகிய இரண்டு போ் கண்காணிப்பு செய்தனா். தொடா்ந்து, மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT