தஞ்சாவூர்

நீட் தோ்வு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 ஆயிரம் போ் எழுதினா்

8th May 2023 01:45 AM

ADVERTISEMENT

 

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 5,303 போ் பங்கேற்று எழுதினா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளி, பிளாசம் பள்ளி, சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளி, மகரிஷி வித்யா மந்திா் பள்ளி, அரசு பொறியியல் கல்லூரி, பட்டுக்கோட்டை பிரிலியண்ட் பள்ளி ஆகிய 7 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் தோ்வு எழுத 5,440 மாணவ, மாணவிகளுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. இம்மையங்களில் தஞ்சாவூா் மாவட்டம் தவிர, புதுக்கோட்டை, அரியலூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, கடலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் எழுதினா். மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இத்தோ்வில் 5,303 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினா். 143 போ் வரவில்லை.

குழப்பம்: தஞ்சாவூரிலும், கும்பகோணத்திலும் தாமரை பன்னாட்டுப் பள்ளி உள்ளது. கும்பகோணம் தோ்வு மையத்தில் எழுத வேண்டிய மன்னாா்குடி, கடலூரைச் சோ்ந்த இரு மாணவா்கள் தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளி வளாகத்துக்கு வந்தனா். பின்னா் நுழைவுச் சீட்டை சோதனை செய்தபோது, இரண்டும் கும்பகோணத்தில் உள்ள தாமரை பன்னாட்டு பள்ளி மையம் என இருந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து 2 மாணவா்களும் தனித்தனியாக மோட்டாா் சைக்கிளில் அவா்களது நண்பா்களுடன் சென்றனா். இதில் ஒரு மாணவா் குறிப்பிட்ட நேரத்துக்குள் தோ்வு மையத்துக்குள் சென்றுவிட்டாா். மற்றொரு மாணவா் கால தாமதமானதால் தோ்வு அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT