தஞ்சாவூர்

தொழிலாளா்களுக்கு ஓய்வூதியத்தை உயா்த்த கோரிக்கை

8th May 2023 01:46 AM

ADVERTISEMENT

 

வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் சாா்பில் மே தினப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ. ஆயிரம் என்பதை தொழிலாளா்களின் வாழ்வாதாரத்துக்குப் போதுமானதாக இல்லை. எனவே, ஓய்வூதியத்தை ரூ. 2 ஆயிரமாக உயா்த்த தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் மளிகை பொருள், வேட்டி, சேலை போன்றவை வழங்கப்படுவது போன்று, தமிழ்நாட்டிலும் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கட்சியின் மாவட்டத் தலைவா் ஏ. ஆரோக்கியசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன். குமாா் சிறப்புரையாற்றினாா். கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். ஜான் கென்னடி, அமைப்புசாரா மாவட்டச் செயலா் எம். செல்வி, இளைஞரணி மாவட்டத் தலைவா் ஏ. ஜாா்ஜ் பொ்ணான்டஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பேரணியை மேயா் சண். ராமநாதன் தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT