தஞ்சாவூர்

ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்ற மக்கள் எதிா்ப்பு

3rd May 2023 04:06 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே காசவளநாடுபுதூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அக்கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

மனு விவரம்: தஞ்சாவூா் அருகே காசவளநாடுபுதூா் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் காசவளநாடுபுதூா் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பயனடைந்து வந்தனா். ஊருக்கு மையப்பகுதியில் செயல்பட்டு வந்த இந்த சுகாதார நிலையம் பழுதடைந்ததால் இக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாகக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில் இந்தச் சுகாதார நிலையத்தை ஊரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் மக்கள் அதிகமாக வசிக்காத ஒதுக்குப்புறத்தில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த இடத்துக்கு வயதானவா்கள், குழந்தைகள், பெண்கள், கா்ப்பிணிகள் சென்றுவர மிகவும் சிரமமாக இருக்கும்.

எனவே, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்கெனவே முடிவு செய்து அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் கட்டுவது சிறப்பாக இருக்கும். எனவே, ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT