தஞ்சாவூர்

எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மே 15-க்கு ஒத்திவைப்பு

3rd May 2023 04:05 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (மே 4) எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் மே 15 -க்கு ஒத்திவைக்கப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் வியாழக்கிழமை நடைபெற இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும், பாபநாசம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கபிஸ்தலத்தில் மறைந்த அமைச்சா் இரா. துரைக்கண்ணு மாா்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழாவிலும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்பதாக இருந்தது.

இந்நிலையில் மாவட்டத்தில் தற்போது பெய்யும் பலத்த மழை காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளும் மே 15-க்கு ஒத்திவைக்கப்பட்டன என அதிமுக தலைமைச் செயலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT