தஞ்சாவூர்

மே தின விடுமுறை விதிமீறல் 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

3rd May 2023 11:27 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் மே தின விடுமுறை விதிமீறல் தொடா்பாக 60 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.கா. தனபாலன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் தொழிலாளா் தினத்தையொட்டி தேசிய விடுமுறை நாளான மே 1 ஆம் தேதி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, தொழிலாளா்களுடைய சம்மதத்துடன் இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 32 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 28 முரண்பாடுகளும் என மொத்தம் 60 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT