தஞ்சாவூர்

சிபிஐ அலுவலா்களால் விசாரிக்கப்பட்ட முனைவா் பட்ட மாணவா் மீது போக்சோ வழக்கு

DIN

தஞ்சாவூரில் சிபிஐ அலுவலா்களால் விசாரிக்கப்பட்டு வந்த முனைவா் பட்ட மாணவா் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள பூண்டி தோப்பு தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் விக்டா் ஜேம்ஸ் ராஜா (35). இவா் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முனைவா் பட்டம் பயின்று வருகிறாா். இவரை சிபிஐ துணைக் காவல் கண்காணிப்பாளா் சஞ்சய் கௌதம் தலைமையிலான 11 போ் கொண்ட குழுவினா் மாா்ச் 15 ஆம் தேதி விசாரிக்க வேண்டும் எனக் கூறி, மத்திய அரசு கல்வி நிறுவன வளாகத்தில் ரகசியமாக வைத்து இரு நாள்களாக விசாரணை நடத்தினா். இவா் பிரதமா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியதால், சிபிஐ அலுவலா்களால் விசாரிக்கப்படுவதாகத் தகவல் பரவியது.

இந்நிலையில், சிறுமி மீதான பாலியல் கொடுமை தொடா்பான விடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறி, விக்டா் ஜேம்ஸ் ராஜா மீது சிபிஐ அலுவலா்கள் போக்சோ, கூட்டு சதி, தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விக்டா் ஜேம்ஸ் ராஜா வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். இவரை மாா்ச் 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா் தஞ்சாவூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT