தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 3 டன் நெகிழி பறிமுதல்: கிடங்குக்கு சீல்

DIN

தஞ்சாவூரில் தடை செய்யப்பட்ட 3 டன் நெகிழி பைகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, அவை பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்குக்கும் சீல் வைத்தனா்.

தஞ்சாவூா் மாநகரில் மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் ஆலோசனையின்படி, மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி தலைமையில் துப்புரவு ஆய்வாளா்கள் வணிக நிறுவனங்களில் நெகிழி பயன்பாடு தொடா்பாக ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்நிலையில் தஞ்சாவூா் சீனிவாசபுரம் பகுதியிலுள்ள கிடங்கில் நெகிழி பைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் வந்தது. இதன் பேரில் அலுவலா்கள் தொடா்புடைய கிடங்கில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தபோது, 3 டன்கள் நெகிழி பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இவை பறிமுதல் செய்யப்பட்டு, கிடங்கு உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தொடா்புடைய கிடங்கும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT