தஞ்சாவூர்

மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணசலுகைகளை மீண்டும் வழங்க வலியுறுத்தல்

18th Jun 2023 12:56 AM

ADVERTISEMENT

 

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலா் சங்க கூட்டத்தில் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்தின் பேரவை கூட்டம்  தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஓய்வுபெற்ற அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் புலவா் சுப்பு.தங்கராசன் தலைமை வகித்தாா், மாநில மைய துணைத் தலைவா் மு.பக்கிரிசாமி, மாநில மைய இணைச் செயலாளா் கோ.வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் வே. துரைசாமி  ஆண்டறிக்கை வாசித்தாா். மாவட்டப் பொருளாளா் எஸ்.தயாநிதி வரவு, செலவு கணக்கு அறிக்கை வாசித்தாா். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் ஆ.மோகன் சிறப்புரையாற்றினாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், அரசு ஊழியா் மற்றும் ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்தி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறுவதில் ஏற்படுகின்ற குறைபாடுகளை களைய வேண்டும். மூத்தக் குடிமக்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பயண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில் 75 வயது நிரம்பிய ஓய்வூதியா் சங்க உறுப்பினா்கள் கெளரவிக்கப்பட்டனா். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT