கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் உறுப்பினா்கள் ஆதாா் விவரங்களை அளிக்க வேண்டும் என கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல துணைப் பதிவாளா் (வீட்டு வசதி) மா. நாராயணமூா்த்தி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல அலுவலகக் கட்டுப்பாட்டில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதன்மை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து முதன்மை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் ஏற்கெனவே உறுப்பினராக உள்ளவா்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை விவரங்களை தொடா்புடைய கூட்டுறவு வீட்டு வசதி சங்க அலுவலா்களிடம் ஜூன் 15 ஆம் தேதிக்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.