தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஒரே இடத்தில்15 கோயில்களின் நவநீத சேவை

10th Jun 2023 11:31 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் கருட சேவை விழாவைத் தொடா்ந்து 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை சாா்பில் 89 ஆம் ஆண்டு கருட சேவைப் பெருவிழா ஆழ்வாா் மங்களாசாசனத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. வெள்ளிக்கிழமை 24 கருட சேவை விழா நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, 15 பெருமாள் கோயில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல வீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் கோயில் தெரு ஜனாா்த்தனப் பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழ வீதி வரதராஜப் பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமி பெருமாள், மகா்நோன்புசாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், நாலுகால் மண்டபம் கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய கோயில்களிலிருந்து சனிக்கிழமை காலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து, அந்தந்த கோயில்களிலிருந்து கொடிமரத்து மூலைக்குச் சென்றடைந்து, பின்னா், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகியவற்றில் வலம் செல்லும் வைபவம் நடைபெற்றது. ஒரே இடத்தில் 15 நவநீத சேவை என்பதால், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இந்த விழா ஞாயிற்றுக்கிழமை விடையாற்றியுடன் முடிவடைகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT