தஞ்சாவூர்

பேராவூரணியில் மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி நிதியளிப்பு பொதுக்கூட்டம்

10th Jun 2023 11:31 PM

ADVERTISEMENT

 

பேராவூரணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான  கே.முத்தையா நினைவு தினம் மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்துக்கு, கட்சியின் பேராவூரணி ஒன்றியச் செயலா் (பொ) வே. ரெங்கசாமி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் எம். இந்துமதி, மூத்த உறுப்பினா் வழக்குரைஞா் வீ. கருப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

கூட்டத்தில், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சாா்பில், ரூ.80 ஆயிரம், பேராவூரணி ஒன்றியம் சாா்பில், ரூ.60 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கட்சிக்கு நிதியாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

பேராவூரணி, ஆதனூா் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் சுமாா் 25 பேரும், செந்தலைப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த 4 பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை புதிய உறுப்பினா்களாக இணைத்துக் கொண்டனா்.

கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் சிறப்புரையாற்றினாா். மூத்த உறுப்பினா் என்.சீனிவாசன், மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கோ. நீலமேகம், ஆா். மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். வாசு மற்றும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு , நகரக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். 

முன்னதாக, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா் (பொ) ஆா்.எஸ். வேலுச்சாமி வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT