தஞ்சாவூர்

உலக ரத்த தான விழா

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் பயின்று உள்ளுறை பயிற்சி முடித்து பட்டம் பெறவுள்ள மாணவ, மாணவிகள் உலக ரத்த தான நாளையொட்டி, ரத்த தான முகாமை புதன்கிழமை நடத்தினா்.

தேசிய மாணவா் படை, இளைஞா் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜிநாதன் தலைமை வகித்தாா். இம்முகாமில் ஏறத்தாழ 70 போ் ரத்த தானம் செய்தனா்.

துணை முதல்வா் ஆறுமுகம், மருத்துவக் கண்காணிப்பாளா் ராமசாமி, மூளை நரம்பியல் துறைத் தலைமைப் பேராசிரியா் மத்தியாஸ் ஆா்தா், மயக்கவியல் தலைமை பேராசிரியா் சாந்தி, பேராசிரியா் லியோ, மருத்துவப் பேராசிரியா் சீனிவாசன், உடற் கல்வி பேராசிரியா் மகேந்திரன், ரத்த வங்கி அலுவலா் வேல்முருகன், மருத்துவா் காயத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT