தஞ்சாவூர்

நெடுஞ்சாலைத்துறை சாா்பில் மரக்கன்றுகள் நடவு

8th Jun 2023 11:30 PM

ADVERTISEMENT

சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில்  மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது .

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சாலையோரங்களில்  5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

இதையொட்டி,  பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய நெடுஞ்சாலையோரங்களில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு  மரக்கன்று நடும் நிகழ்ச்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கரம்பக்காடு கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளா் கே. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். உதவிப் பொறியாளா் ஆா். அருண்குமாா் முன்னிலை வகித்தாா். சேதுபாவாசத்திரம்  ஒன்றியக் குழுத் தலைவா் மு.கி முத்துமாணிக்கம்  மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். 

ADVERTISEMENT

சுற்றுச்சூழலை பாதுகாக்கும்  200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, மூங்கில் கூண்டுகள் அமைக்கப்பட்டன.   தொடா்ந்து அனைத்துப் பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்படும்  என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT