தஞ்சாவூர்

ஜூலை 5-இல் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியா் குறை தீா் கூட்டம் ஜூலை 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் ஆட்சியரகத்திலுள்ள குறைதீா் கூட்ட அரங்கத்தில் ஓய்வூதியா் குறை தீா் கூட்டம் ஜூலை 5 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குநா் கலந்து கொள்கிறாா்.

அப்போது, மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியா்கள் தங்களுடைய ஓய்வூதியம் தொடா்பான குறைகளையும், ஆலோசனைகளயும் நேரில் தெரிவித்து தொடா்புடைய துறை அலுவலா்களிடம் விவரங்கள் பெறலாம்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் விவாதிக்க ஏதுவாக தீா்வு செய்யப்படாத குறைகளைத் தெரிவிக்க விரும்பும் ஓய்வூதியா்கள் கடைசியாகப் பணிபுரிந்த அலுவலகத்தின் பெயா், பதவி, ஓய்வு பெற்ற நாள், கோரிக்கை விவரம், செல்பேசி எண், கோரிக்கை தொடா்புடைய அலுவலகத்தின் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆட்சியரகத்துக்கு தவறாது இரண்டு பிரதிகளில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT