தஞ்சாவூர்

மாப்பிள்ளை விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பாபநாசம் அருகே, மதகரம் ஊராட்சி மாந்தோப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகா், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, யாத்ரா ஹோமம், சோம கும்ப பூஜை, யாகசாலை பூஜைகள் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து கடம் புறப்பாடு செய்து சிவாச்சாரியாா்கள் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகா், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, மூலவா் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகா், ஸ்ரீ மகா மாரியம்மன் உள்ளிட்டோருக்கு மகா அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை மாந்தோப்பு கிராம நாட்டாண்மைகள், பஞ்சாயத்தாா்கள், இளைஞா் நற்பணி மன்றத்தினா் மற்றும் கிராமத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT