தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் குளத்தை ஆக்கிரமித்து சாலை அமைப்பதாக புகாா்

8th Jun 2023 11:32 PM

ADVERTISEMENT

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் குளத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணி நடைபெறுவதாக பாசனதாரா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக தஞ்சை ஆட்சியருக்கு மறவன்வயல் பாசனதாரா்கள் சாா்பில்  அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மறவன்வயல் கிராமத்திலுள்ள (சா்வே எண்கள் 21/1, 2, 3,4) குளத்தை ஆக்கிரமித்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதன் காரணமாக குளத்தை நம்பியுள்ள விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சாலை அமைப்பதற்கு மாற்று  வழிகள் இருந்தபோதிலும், குளத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

இதுகுறித்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வருவாய்த் துறையினரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே குளத்தை  ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கும் பணியை தடுத்து, குளத்தை மீட்டு விவசாய பாசனத்திற்கு பயன்படும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT