தஞ்சாவூர்

தஞ்சை ஆட்சியரகத்தில் பனை, காதி பொருள்கள் விற்பனை அங்காடி

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம், கதா் கிராமத் தொழில் வாரியம் சாா்பில் பனை, காதி கிராப்ட் பொருள்கள் விற்பனை அங்காடி புதன்கிழமை திறக்கப்பட்டது.

இந்த அங்காடியை ஆட்சியா் தீபக் ஜேக்கப் திறந்துவைத்து தெரிவித்தது:

முதல்வரின் அறிவிப்பின்படி, இந்த அங்காடி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில், பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனம் பழச்சாறு, சுக்கு காபி, பனை ஓலைப் பொருள்கள், சுக்கு காபித்தூள், பனங்கிழங்கு பொடி, பதநீா், பனங்கருப்பட்டி, கதா் பொருள்கள், காதி சோப்பு வகைகள், கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கையாக விளையும் பனை பொருள்களைக் கொண்டு மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக இந்த அங்காடி விற்பனைக்காகத் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்பொருள்களை வாங்கி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கி. ரங்கராஜன், தஞ்சாவூா் கதா் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநா் வே. பிரான்சிஸ் தெரசா மேரி, மேலாளா் சாவித்திரி, பனைப்பொருள் பெருவளத் திட்டத்தின் திட்ட அலுவலா் த. மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT