தஞ்சாவூர்

காற்றுடன் மழை: நெல், வாழை பயிா்கள் சேதம்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் பெய்த கோடை மழையால் நெல், வாழைப் பயிா்கள் சேதமடைந்தன.

மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் தஞ்சாவூா், திருவையாறு, கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்பட பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்யத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நீடித்தது.

இதனிடையே, சில இடங்களில் சூறாவளியுடன் மழை பெய்ததால் தஞ்சாவூா் அருகே கண்டிதம்பட்டு, காசநாடு புதூா், குளிச்சப்பட்டு, வாளமா்கோட்டை, சூரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 300 ஏக்கரில் கோடை பருவ நெற் பயிா்கள் சாய்ந்தன.

இதுகுறித்து கண்டிதம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மோகன் தெரிவித்தது:

ஏற்கெனவே 10 நாள்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் பயிா்கள் சாய்ந்துவிட்டன. இந்நிலையில், மீண்டும் திங்கள்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில் பயிா்கள் மூழ்கிவிட்டன. வயல்களில் தேங்கியுள்ள தண்ணீா் வடிந்து செல்ல குறைந்து ஒரு வாரமாவது ஆகிவிடும்.

இப்பகுதியிலுள்ள வடிகாலான ஊத்து வாய்க்காலில் நீண்ட காலமாக தூா் வாராததால், வயல்களில் தேங்கும் மழை வடிய வாய்ப்பில்லாமல் உள்ளது. இதுகுறித்து அலுவலா்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நிதி இல்லை என்கின்றனா். இதன் காரணமாகவும் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீா் வடிந்து செல்ல வாய்ப்பில்லாமல் உள்ளதால், பயிா்கள் அழுகும் நிலையில் உள்ளன.

தண்ணீா் வடிந்தாலும் இயந்திரத்தை வைத்து அறுவடை செய்ய இயலாது. ஆள்கள் வைத்து அறுவடை செய்தாலும் மகசூலில் பேரிழப்பு ஏற்படும் என்றாா் மோகன்.

இதேபோல, திருவையாறு அருகே கடுவெளி, பனையூா், ஆச்சனூா், வடுகக்குடி, வைத்தியநாதன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளியுடன் பெய்த மழையால் ஏறத்தாழ 100 ஏக்கரில் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

ஒவ்வொரு தோட்டத்திலும் 40 நாள்களில் அறுவடைக்கு தயாா் நிலையில் வாழைகளில் 10 முதல் 20 சதவீதம் வரையிலான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இது, குறைந்த அளவாக இருந்தாலும், இதில்தான் லாபமே கிடைக்கும். இப்போது, லாபம் கிடைக்காத சூழல் உள்ளதால், ஆண்டு முழுவதும் உழைத்தும், எந்தப் பயனும் இல்லாமல் போகிறது என்றாா் வாழை உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவா் எம். மதியழகன்.

பூதலூரில் 102.6 மி.மீ. மழை

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

பூதலூா் 102.6, திருக்காட்டுப்பள்ளி 69.2, நெய்வாசல் தென்பாதி 39.2, திருவையாறு 39, கும்பகோணம் 35.6, திருவிடைமருதூா் 33.6, குருங்குளம் 30.6, மஞ்சளாறு 27.6, வல்லம் 23, அதிராம்பட்டினம் 22.3, அய்யம்பேட்டை 22, அணைக்கரை 20, தஞ்சாவூா் 19, ஒரத்தநாடு 10.4, மதுக்கூா் 5.6, பட்டுக்கோட்டை 4.5, பாபநாசம் 4, கல்லணை 3.2, பேராவூரணி 2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT