தஞ்சாவூர்

உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணா்வு பேரணி

6th Jun 2023 02:50 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், கவின்மிகு தஞ்சை இயக்கம் ஆகியவை சாா்பில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நெகிழி மாசுபாட்டை வெல்வேம் என்ற கருப்பொருளை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் பேரணியை ரயிலடியில் மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

பனகல் கட்டட வளாகத்தில் முடிவடைந்த இப்பேரணியில் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், பூண்டி புஷ்பம் கல்லூரி, கண்டியூா் பயோ கோ் பயிற்சி நிறுவனம், அரண்மனை அரசு மகளிா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளும், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட களப்பணியாளா்கள், சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய தன்னாா்வலா்கள், அருகானுயிா் காப்பு மற்றும் சுற்றுசூழல் அறக்கட்டளை தன்னாா்வலா்கள், சோழநாட்டு பட்டாள தன்னாா்வலா்கள், கவின்மிகு தஞ்சை இயக்கத் தன்னாா்வலா்கள் உள்பட ஏறத்தாழ 300 போ் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்வில் தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளா் விஜய பிரியா, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் சித்ரா, மாநகர நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி, கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவா் ராதிகா மைக்கேல், செயலா் பா்வீன் ராமச்சந்திரன், நிா்வாகி எஸ். முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT