தஞ்சாவூர்

ராஜகிரி காமாட்சி அம்மன் கோயில் பால்குட விழா

6th Jun 2023 02:51 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு திரளான பக்தா்கள் காப்புகட்டி, விரதமிருந்து இராஜகிரி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி எடுத்து தப்பாட்டம் வாணவேடிக்கையுடன் முக்கிய வீதி வழியாக ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து மாலை மாவிளக்கு பூஜையும், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், பஞ்சாயத்தாா்கள், கிராமவாசிகள், மகளிா் சுய உதவிக்குழுவினா், இளைய தலைமுறை நற்பணி மன்றத்தினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT