தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே குளத்தில் மூழ்கி 2 சகோதரிகள் பலி

6th Jun 2023 02:41 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற 2 சகோதரிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள கோமாபுரத்தைச் சோ்ந்தவா் புண்ணியமூா்த்தி. புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கோமதி. இவா்களது மகள்கள் பெரியநாயகி (8) மூன்றாம் வகுப்பும், பிரதிக்சா (6) ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனா். புண்ணியமூா்த்தி தனது மனைவியின் சொந்த ஊரான தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகேயுள்ள வல்லம் புதூருக்கு குடும்பத்துடன் அண்மையில் வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை பெரியநாயகி, பிரதிக்சாவை புண்ணியமூா்த்தி அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள புதுக்குளத்துக்குக் குளிப்பதற்காக அழைத்துச் சென்றாா். மகள்களைக் கரையில் உட்கார வைத்து விட்டு இயற்கை உபாதைக்காக புண்ணியமூா்த்தி அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றாா். பின்னா் புண்ணியமூா்த்தி திரும்பி வந்து பாா்த்தபோது கரையில் உட்காா்ந்திருந்த பெரியநாயகி, பிரதிக்சாவை காணவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்களுடன் குளத்தில் இறங்கி தேடியபோது, பெரியநாயகி, பிரதிக்சா சடலமாக மீட்கப்பட்டனா். தகவலறிந்த வல்லம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT