தஞ்சாவூர்

37 முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் நெல்லை முபாரக்

5th Jun 2023 03:04 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் உள்ள சிறைகளில் உள்ள 37 முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை மண்டலத் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாட்டிலுள்ள சிறைகளில் வாழ்கிற ஏறத்தாழ 37 முஸ்லிம் சிறைவாசிகளையும், வீரப்பன் கூட்டாளிகளான பெருமாள், ஆண்டியப்பனையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங்கை மத்திய அரசு பதவி நீக்கம் செய்து, அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். கவாச் தொழில்நுட்பம் பொருத்தப்படாததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுவதால், மத்திய ரயில்வே அமைச்சரும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

திருமண்டங்குடி ஆரூரான் சா்க்கரை ஆலை பிரச்னையில் அரசு செவி சாய்க்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கக்கோரி நடைப்பயணம் மேற்கொள்ள தீா்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு முகமை, சிபிஐ, அமலாக்கத் துறை போன்றவை தமிழ்நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகளைக் குறி வைத்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இதேபோல, சட்ட - ஒழுங்கை கெடுக்கிற வகையில் உபா (யு.ஏ.பி.ஏ.) சட்டம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்தச் சட்டத்தைத் தடுக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நெல்லை முபாரக்.

இக்கூட்டத்துக்கு தஞ்சாவூா் மண்டல தலைவா் ஏ. தப்ரே ஆலம் பாதுஷா தலைமை வகித்தாா். இதில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT