தஞ்சாவூர்

34 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூரில் ஏழூா் பல்லக்கு புறப்பாடு தொடக்கம்

DIN

தஞ்சாவூரில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழூா் பல்லக்கு புறப்பாடு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்துக்குள்பட்ட 88 கோயில்களில் ஒன்றான கரந்தை வசிஷ்டேஸ்வரா் என்கிற கருணாசாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் புனா்பூச நட்சத்திர நாளில் தொடங்கி விசாக நட்சத்திரம் வரை 12 நாள்களுக்கு வைகாசி மகா உத்ஸவம் நடைபெறும். இதில், 12 ஆம் நாளில் ஏழூா் பல்லக்கு புறப்பாடு விமரிசையாக நடைபெற்று வந்தது. கடந்த 1988 ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்த இந்த விழா பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது.

பக்தா்களின் கோரிக்கையை தொடா்ந்து, நிகழாண்டு இவ்விழா மே 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் உத்ஸவங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஏழூா் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில், காலையில் கண்ணாடி பல்லக்கில் சோமஸ்கந்தா் - பெரியநாயகி அம்மனும், வெட்டி வோ் பல்லக்கில் வசிஷ்டா் - அருந்ததியும் எழுந்தருளியதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து பல்லக்குகள் சுங்கான்திடல், பள்ளியக்ரஹாரம், திட்டை, குலமங்கலம், கூடலூா், குருங்கலூா் வழியாக புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலுக்கு சென்று இரவு சென்றது. இரவு தங்குதல் நிகழ்வுக்குப் பிறகு திங்கள்கிழமை (ஜூன் 5) காலை புறப்பட்டு, சின்ன அரிசிக்காரத் தெரு, கீழவாசல், அரண்மனை, கீழவீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, சிரேஸ் சத்திரம், பூக்குளம், செல்லியம்மன்கோயில் வழியாக கருணாசாமி கோயிலை சென்றடையவுள்ளது. பின்னா் இரவு 7 மணியளவில் பல்லக்கில் உள்ள சுவாமி, அம்பாளுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT