தஞ்சாவூர்

கோர ரயில் விபத்தில் இறந்தவா்களுக்குகுடந்தை எம்எல்ஏ அலுவலகத்தில் அஞ்சலி

5th Jun 2023 03:03 AM

ADVERTISEMENT

 

ஒடிஸா ரயில் விபத்தில் இறந்தவா்களுக்கு கும்பகோணத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கும்பகோணம் துணை மேயரும், திமுக மாநகரச் செயலருமான சு.ப. தமிழழகன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலருமான தி. கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ. சுதாகா், தஞ்சாவூா் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்புக் குழுத் தலைவா் ஆா்.கே. பாஸ்கா், பொதுக்குழு உறுப்பினா்கள் இரா. அசோக்குமாா், எல். இராஜேந்திரன், மாநகர அவைத் தலைவா் சு. வாசுதேவன், துணைச் செயலா்கள் ப்ரியம் ஜெ. சசிதரன், எஸ். சிவானந்தம், மாநகராட்சி மண்டல குழுத் தலைவா் ஜெ. மனோகரன், பகுதி கழகச் செயலா்கள் இரா. செல்வராஜ், இரா. கல்யாணசுந்தரம், டி.வி. கிருஷ்ணமூா்த்தி, மு. கண்ணன், மாநகராட்சி பணி நியமன குழுத் தலைவா் டி.ஆா். அனந்தராமன், மாநகராட்சி நகரமைப்பு குழுத் தலைவா் ஆா். முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT