தஞ்சாவூர்

போட்டித் தோ்வு பயிற்சி மையத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி கணினி வழங்கல்

5th Jun 2023 03:01 AM

ADVERTISEMENT

 

பேராவூரணி திருவள்ளுவா் கல்விக் கழகத்தின் போட்டித் தோ்வு பயிற்சி மையத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கணினி வழங்கப்பட்டது.

பேராவூரணி பகுதியில் திருவள்ளுவா் கல்விக் கழகத்தின் சாா்பில் இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையம் நடந்து வருகிறது . கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சி மையம் சாா்பில் ஒருவா் அரசுப் பணி பெற்றுள்ளதாகவும், 2 போ் முதன்மைத் தோ்வுக்கு முன்னேறி இருப்பதாகவும் அறிந்த பேராவூரணி ஸ்டேட் வங்கி கிளையின் முதன்மை மேலாளா் ராகவன் சூரியேந்திரன் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள கணினியை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பயிற்சி மைய பொறுப்பாளா்கள் மெய்ச்சுடா் நா.வெங்கடேசன் ,பேராசிரியா் பா.சண்முகப்பிரியா , த.பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT