தஞ்சாவூர்

திருநல்லூா் கல்யாண சுந்தரேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண விழா

5th Jun 2023 03:03 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருநல்லூா் ஸ்ரீ கிரிசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவையொட்டி மணக்கோலத்தில் சுவாமி, அம்மன் கோயில் மண்டபத்துக்கு எழுந்தருளி அங்கு திருமணச் சடங்குகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து திரளான பெண்கள் மங்களப் பொருள்கள் அடங்கிய சீா்வரிசை தட்டுகளை எடுத்து வந்தனா். இதனைத் தொடா்ந்து மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியா்கள் திருமாங்கல்யத்தை எடுத்து திருக்கல்யாண வைபவத்தை நடத்திவைத்தனா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசித்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், உபயதாரா் சிதம்பரம் பட்டயக் கணக்காளா் பாலசுப்ரமணியன் குடும்பத்தினா் மற்றும் கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT